A.S. நாட்டாண்மைகுணசேகரனா
தமிழ்நாடு மாநில தலைவர்
அண்ணா மக்கள் கட்சி

A.S. நாட்டாண்மைகுணசேகரனா

தமிழ்நாடு மாநில தலைவர்

🧵 நெசவாளர்களின் வாரிசு 📍 சின்னசேலம், கள்ளக்குறிச்சி 🗓️ பிறப்பு: 02/10/1964
8000+
நெசவாளர் குடும்பங்கள்
800+
ஆண்டு பாரம்பரியம்
1936
கூட்டுறவு சங்கம்
2800+
கைத்தறி நெசவாளர்கள்

மாநில தலைவரின் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டமாக விளங்கிய தென் ஆற்காடு மாவட்டம் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும், மேற்படி மாவட்டத்தில் சின்னசேலம் என்ற கிராமத்தில், நாட்டாண்மைகாரர் ஆறுமுக முதலியார் — செல்லம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக 02/10/1964ல் பிறந்தவர் நாட்டாண்மை குணசேகரன்.

🏛️ நெசவாளர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், சுமார் 8000 குடும்பங்களின் நாட்டாண்மைக்காரர் வம்சத்தை சேர்ந்தவர். இவருடைய வரலாறு சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியமாய் வம்சாவழி நாட்டாண்மைக்காரராய் விளங்கிய குடும்பத்தில் இருந்து வருகிறது.

இவரது தாத்தா சின்னசேலம் கிராமத்தில் 2800க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களை கொண்டு 1936ஆம் ஆண்டில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆரம்பித்தார். அதற்காக சுமார் 8 ஏக்கர் 58 சென்ட் நிலத்தை தன் குடும்ப சொத்தை கைத்தறி நெசவாளர்களுக்காக 39 வீடுகள் கட்டி தானமாக கொடுத்தவர்.

மேலும் சின்னசேலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கூடங்களை கட்டிக் கொடுத்துள்ளார். 1946 ஆம் ஆண்டு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் மேல்நிலைப் பள்ளியை உருவாக்கித் தந்தவர்.

பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே மன்னர்கள் இவர்கள் குடும்பத்திற்கு செப்புப்பட்டயம் மூலம் சின்னசேலம் குடும்பத்தின் மிகப்பெரிய நெசவாளர்களின் குடும்பம் என்று வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் குலத்தொழில் நெசவுத்தொழில் & ஜவுளி வியாபாரம் இன்று வரை பாரம்பரியமான தொழிலாக தொடர்கின்றது.

இவர் சிறு வயது முதலே மக்கள் சேவையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதனால் நெசவாளர்களுக்காக உலக செங்குந்தர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் நெசவாளர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகின்றார். சின்னசேலம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் நாட்டாண்மைக்காரராகவும் செயல்படுகின்றார்.

மக்கள் சேவையே தனது குறிக்கோளாக கொண்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதால் அண்ணா மக்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாடு மாநில தலைவராக தற்போது செயல்பட்டு வருகின்றார்.

இவர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக தேர்தலில் நின்றார். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இயற்கை விவசாயத்தினை முன்னிறுத்தி மக்களை நோய் நொடியின்றி காப்பாற்றும் நோக்கில் செயல்படுகின்றார்.

💬 "மக்களுக்காகவே சேவை செய்வதுதான் எனது கடமை" என உறுதியாக இன்று வரை செயல்பட்டு வருகின்றார் — நாட்டாண்மை குணசேகரன்.

தனிப்பட்ட விவரங்கள்

🎂
பிறந்த தேதி
02 / 10 / 1964
📍
சொந்த ஊர்
சின்னசேலம், கள்ளக்குறிச்சி
👨‍👩‍👧‍👦
தந்தை / தாயார்
ஆறுமுக முதலியார் / செல்லம்மாள்
💒
துணைவியர்
சாந்தி & செவ்வந்தா
👧
மகள்
விஜயலட்சுமி
👦
மகன்
ஸ்ரீ ஆறுமுகம்
🧵
குலத்தொழில்
நெசவு & ஜவுளி வியாபாரம்
🏛️
தற்போதைய பதவி
AMK மாநில தலைவர்

வாழ்க்கை வரிசை

12ஆம் நூற்றாண்டு

அரச செப்புப்பட்டயம்

மன்னர்களால் நெசவாளர் குடும்பத்திற்கு செப்புப்பட்டயம் வழங்கல்

1936

தாத்தாவின் தொலைநோக்கு

நெசவாளர் கூட்டுறவு சங்கம் — 8 ஏக்கர் நிலம் + 39 வீடுகள் தானம்

1946

கல்வி புரட்சி

ஆண்கள் & பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் நிறுவல் — அனைத்து சமுதாயத்தினருக்காக

02/10/1964

பிறப்பு

சின்னசேலம், கள்ளக்குறிச்சி — நாட்டாண்மைகாரர் குடும்பத்தில்

பின்னர்

உலக செங்குந்தர் பேரவை

நெசவாளர்களுக்காக சேவை அமைப்பு ஏற்படுத்தி சமூக பணி

2024

பாராளுமன்றத் தேர்தல்

கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் — நெசவாளர்கள் வாக்குகள் பெற்றார்

2026 — தற்போது

AMK மாநில தலைவர்

அண்ணா மக்கள் கட்சி — இயற்கை விவசாயம் & நெசவாளர் முன்னேற்றம்

🎯 இன்று இணையுங்கள்

கொள்கைகளை
செயல்படுத்த
இணைந்து கொள்ளுங்கள்!

அண்ணா மக்கள் கட்சி — நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் உறுதுணையாக இன்று நீங்களும் ஒரு பகுதியாகுங்கள்