மக்கள் நலன் — எங்கள் முதன்மை
இந்தியா முழுவதும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட புரட்சிகர கொள்கைகள்
நெசவாளர்களின் வாழ்வாதாரம் காப்போம்
இந்தியா முழுவதும் வாழ்கின்ற நெசவுத் தொழில் செய்கின்ற அனைத்து நெசவாளர்களையும் — கடந்த கால கைத்தறி நெசவுடன் நடைமுறையில் உள்ள விசைத்தறிகளும் நெசவாளர்களும், நவீனமயமாக்கப்பட்ட நெசவுத் தொழிலையும் பாதுகாப்பதும், மேற்படி நெசவு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதும் எங்கள் முதன்மை கொள்கை.
🎯 நம் செயல் திட்டங்கள்:
- ✅ இந்தியா முழுவதும் உள்ள நெசவுத் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நெசவாளர் தொழில் பயிற்சி மையம் ஏற்படுத்துதல்
- ✅ ஒரு தொகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நெசவு தொழிற்சாலையில் பயிற்சி
- ✅ 6 மாத பயிற்சிக்குப் பிறகு சிறந்தவர்களை தேர்வு செய்து மத்திய அரசு கடன் மூலம் சுயதொழில்
- ✅ சுயதொழிலாளராகவும் சிறந்த தொழிலதிபராகவும் இந்தியாவில் உருவாக்குதல்
- ✅ மாநில-மத்திய அரசு உதவியுடன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து நெசவாளர்கள் வருமானம் உயர்த்துதல்
இந்தியாவில் உற்பத்தியாகும் நெசவுப் பொருட்களை மாநில அரசு உதவியுடன் மத்திய அரசு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து போராடும் ஓர் இயக்கமாக அண்ணா மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது.
🤝 எங்கள் உறுதிமொழி:
இந்தியாவில் உள்ள அனைத்து நெசவாளர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் அண்ணா மக்கள் கட்சியின் வாயிலாக தங்களது வாழ்வாதார மேம்பாடு வளர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள, இந்த அண்ணா மக்கள் கட்சி முழு செயல்பாட்டுடன் இந்தியா முழுவதும் செயல்படும்.
இயற்கை விவசாய புரட்சி
இந்தியா முழுவதும் விவசாயமே பெரும்பான்மையாக நம் மக்களின் முக்கியமான தொழிலாக உள்ளது. அந்த தொழிலை தற்போது வரை செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனம் கலந்த விதைப் பொருள்கள் கொண்டு விவசாயம் செய்வதினால், இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நிலைமை எண்ணற்ற நோய்களுடன் வாழக்கூடிய உணவாக விவசாயம் மாறிவிட்டது.
⚠️ தற்போதைய நிலை — ஓர் எச்சரிக்கை:
இந்த நிலைமை மாறவில்லை எனில், எண்ணிலடங்கா நோய்களுடன் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு நமது மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ரசாயன விஷம் கலந்த உணவு — இனி ஒரு நாளும் ஆகாது!
இந்த நிலைமை மாற வேண்டுமானால், மத்திய மாநில அரசுகளின் துணையுடன் இயற்கை விவசாயத்தை இந்திய மக்கள் செய்து, மக்களின் நோயற்ற வாழ்வாதாரத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
🌿 அண்ணா மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள்:
- ✅ இயற்கை உர உற்பத்தி மையங்கள் — ஒவ்வொரு தொகுதியிலும் நிறுவுதல்
- ✅ விவசாயிகளுக்கு இலவச பயிற்சி — இயற்கை விவசாய முறைகள்
- ✅ ரசாயன விதை ஒழிப்பு — இயற்கை விதை இலவச வினியோகம்
- ✅ மத்திய & மாநில அரசிடம் வலியுறுத்தல் — கொள்கை அளவில் போராட்டம்
- ✅ நேரடி சந்தை இணைப்பு — விவசாயி முதல் நுகர்வோர் வரை
அண்ணா மக்கள் கட்சியின் முக்கிய கொள்கையான இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, அதனை வழிநடத்திட மத்திய மாநில அரசிடம் வலியுறுத்தி போராடி, மக்களுக்காக நோயற்ற வாழ்வை சிறந்ததென தெளிவுபடுத்திட இயற்கை விவசாயத்தினை ஊக்கிவிப்போம்!
🌾 எங்கள் உறுதிமொழி:
அதற்காக தொடர்ந்து போராடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடுவோம்!
"இயற்கை விவசாயத்தை செய்வோம் — நோயற்ற வாழ்வை வாழ்வோம்!"
மண்வளம் & நீர்வளம் பாதுகாப்போம்
நாம் வாழ்கின்ற பகுதியில் உள்ள மண்வளத்தை மற்றும் நீர்வளத்தை பாதுகாப்பது நமது தலையாய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து ஏரி குளங்களின் கரைகளிலே பனை மரத்தின் விதையினை விதைப்போம் — அதனால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும், மண்வளமும் பாதுகாக்கப்படும்.
🌴 பனை மரம் — ஏன் இது சிறந்தது?
- 🌿 மண் அரிப்பை தடுக்கும் — ஆழமான வேர்கள் மண்வளம் காக்கும்
- 💧 நீர்நிலைகளை பாதுகாக்கும் — கரை உறுதிப்படுத்தும்
- 🌞 வெப்பநிலை குறைக்கும் — சுற்றுச்சூழல் மேம்படும்
- 🥤 மனிதனுக்கு சிறந்த உணவு — பனை நுங்கு, கருப்பட்டி, நீரா
- 💚 நீண்ட ஆரோக்கியமான வாழ்வு — "பனை ஆயிரம், ஆயுள் ஆயிரம்"
மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் நீர்நிலை உள்ள பகுதியில் பனை மரத்தின் விதைகளை விதைப்போம். "பனை ஆயிரம்" என்ற இலக்கை உறுதி செய்தால், மனிதனின் ஆயுள் காலமும் சிறந்த உணவும் நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்.
🎯 அண்ணா மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள்:
- ✅ அனைத்து ஏரி, குளம், நதிக் கரைகளில் பனை விதை விதைப்பு இயக்கம்
- ✅ மத்திய & மாநில அரசுடன் இணைந்து நீர்நிலை பாதுகாப்பு திட்டம்
- ✅ மண்வள சோதனை மையங்கள் — ஒவ்வொரு தொகுதியிலும்
- ✅ விவசாயிகளுக்கு இலவச பனை விதை வினியோகம்
- ✅ நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் — கிராமம் தோறும்
மண்வளம் மற்றும் நீர்வளம் பாதுகாப்பது நமது கடமை என்பதால், அண்ணா மக்கள் கட்சி தொடர்ந்து போராடி இந்தியாவின் இயற்கை வளங்களை காத்து, வரும் தலைமுறைக்கு சிறந்த சூழலை உருவாக்கிடும்.
🌾 எங்கள் உறுதிமொழி:
"பனை ஆயிரம் நட்போம் — மண்ணும் நீரும் காப்போம்!"
மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்காக இயற்கையை பாதுகாப்போம்!
சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு
சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு இந்தியா முழுவதும் திறம்பட செயல்பட வேண்டியது இன்று அவசியமாகிவிட்டது. கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை, அந்தந்த பகுதியில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுப் பொருட்கள் நீர்நிலைகளிலும் அந்தந்த பகுதியிலேயே சுத்தப்படுத்தாமல் தேங்கியுள்ளன.
⚠️ தற்போதைய நிலை — ஓர் எச்சரிக்கை:
தேங்கிய கழிவுகளால் அனைத்து மக்களும் நோய் நொடிகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், மண் — இவை இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமில்லை!
மத்திய மாநில அரசுகள் கழிவுகளை அப்புறப்படுத்தி தரம் பிரித்து, இயற்கை விவசாயத்திற்கு உபயோகப்படுத்தவும், இயற்கை விவசாயத்திற்கு எதிரான கழிவுப் பொருட்களை சரியான முறையில் கையாளவும் அண்ணா மக்கள் கட்சி வலியுறுத்தும்.
🎯 அண்ணா மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள்:
- ✅ கழிவு தரம் பிரிப்பு மையங்கள் — கிராமம் முதல் நகரம் வரை
- ✅ இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற கழிவு மறுசுழற்சி — உரமாக மாற்றுதல்
- ✅ நீர்நிலை கழிவு அகற்றல் — ஏரி, குளம், நதி சுத்திகரிப்பு
- ✅ தொழிற்சாலை கழிவு கட்டுப்பாடு — மத்திய அரசிடம் வலியுறுத்தல்
- ✅ கிராம சுகாதார திட்டம் — ஒவ்வொரு பகுதியிலும் சுத்தம்
- ✅ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் — மக்கள் பங்கேற்பு
மாசற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதியுடன், அண்ணா மக்கள் கட்சி மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வழிநடத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பே வரும் தலைமுறைக்கான நம் கொடை!
🌍 எங்கள் உறுதிமொழி:
"மாசற்ற சூழலை உருவாக்குவோம் — ஆரோக்கியமான இந்தியாவை கட்டமைப்போம்!"
அதற்காக உறுதியாக போராடி அண்ணா மக்கள் கட்சி வழிநடத்தும்!
கொள்கைகளை
செயல்படுத்த
இணைந்து கொள்ளுங்கள்!
அண்ணா மக்கள் கட்சி — நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் உறுதுணையாக இன்று நீங்களும் ஒரு பகுதியாகுங்கள்