G.K. செவ்வந்தா
தேசியத் தலைவர் & நிறுவனர்
அண்ணா மக்கள் கட்சி, இந்தியா
தேசியத் தலைவரின் வாழ்க்கை வரலாறு
தற்போதுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் — ஆறுமுகம் முதலியார் — கஸ்தூரி அம்மாள் தம்பதியருக்கு முதலாவது மகளாக பிறந்தவர் G.K. செவ்வந்தா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவரிடம் யார் சென்று உதவி கேட்டாலும் அவரால் முடிந்த உதவியை செய்வது மட்டுமே இவருக்கு மிகவும் பிடித்தமானது. தனது இளமைப் பருவத்திலேயே மக்கள் சேவையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
மீண்டும் தனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் — தனது தங்கையின் கணவரான, பொது சேவையில் அனைத்து மக்களாலும் மதிக்கப்படுகின்ற நாட்டாண்மை குணசேகரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவர் பொது வாழ்க்கையில் மிகவும் ஈடுபட்டு தொண்டு நிறுவனங்களிலும் பல பொது சேவைகள் செய்வதை பார்த்ததும், அவருடன் சேர்ந்து பொது சேவை செய்வதை இவர் மிகவும் விரும்பினார்.
தன்னுடைய கணவரின் ஒப்புதலுடன் அண்ணா மக்கள் கட்சி என்ற அமைப்பை நிறுவி — நிறுவனத் தலைவராக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அதன் மூலம் இந்தியாவில் உள்ள நெசவாளர்களுக்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணிப்பேன் என்ற உறுதியோடு செயல்படுகின்றார்.
🎯 எங்கள் உறுதிமொழி:
இவரின் சேவை தற்போதுள்ள இந்திய நாட்டின் நெசவாளர்களின்
வாழ்வாதாரத்தின் ஒரு முக்கியமான அரசியல் கட்சியாக
அண்ணா மக்கள் கட்சி செயல்படுகின்றது.
"மக்கள் சேவையில் தனித்துவம் — அண்ணா மக்கள் கட்சியின் வழி!"
வாழ்க்கைப் பயணம்
பிறவி குணம் — மக்கள் சேவை
சிறு வயது முதலே யாரிடம் உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வது — இவருடைய இயல்பு.
திருமண வாழ்க்கை முறிவு
குடும்ப வாழ்க்கையை விட பொது சேவையே பெரிது என்ற உறுதியில் முதல் திருமணத்தை முறித்துக் கொண்டார்.
இரண்டாம் திருமணம்
மக்கள் சேவகர் நாட்டாண்மை குணசேகரன் அவர்களை திருமணம் செய்து — இருவரும் சேர்ந்து பொது சேவையில் இறங்கினர்.
கட்சி நிறுவல் யோசனை
"மக்கள் சேவையில் தனித்துவம் காண வேண்டும்" என்ற எண்ணத்தில் கணவரிடம் ஆலோசனை வழங்கினார்.
AMK கட்சி நிறுவல்
அண்ணா மக்கள் கட்சியை நிறுவி — தேர்தல் ஆணையத்தில் நிறுவனத் தலைவராக பதிவு செய்தார்.
நெசவாளர் அர்ப்பணிப்பு
இந்தியாவில் உள்ள நெசவாளர்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் உறுதியுடன் இன்றும் செயல்படுகின்றார்.
தனிப்பட்ட விவரங்கள்
எங்கள் தேசியத் தலைவரின் தொலைநோக்கு
இந்தியாவில் உள்ள நெசவாளர்கள், விவசாயிகள், மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே தேசியத் தலைவரின் ஒரே குறிக்கோள்.
நெசவாளர் முன்னேற்றம்
இந்தியா முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும்
இயற்கை விவசாயம்
ரசாயனமற்ற விவசாயம் — நோயற்ற வாழ்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மண்வளம், நீர்வளம் — வரும் தலைமுறைக்காக
மக்கள் சேவை
யாரும் கேட்காலும் உதவும் — பிறவி கொள்கை